/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கே.எல்.என்., கல்லுாரி வளாகத் தேர்வு
/
கே.எல்.என்., கல்லுாரி வளாகத் தேர்வு
ADDED : மார் 19, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கே.எல்.என். பாலிடெக்னிக் கல்லுாரியில் சென்னை நோக்கியா நெட்வொர்க்கிங் அண்ட் சொல்யூசன்ஸ் சார்பில் வளாகத் தேர்வு நடந்தது.
முதல்வர் ஆனந்தன் வரவேற்றார். கல்லுாரி செயலாளர் கே.பி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் முரளிதரன், துணை முதல்வர் சகாதேவன், துறைத்தலைவர்கள் ராஜேஷ்பிரபு, பிரேம்குமார், ஜெயலட்சுமி, ஆதிராஜன் ஏற்பாடுகளை செய்தனர். 2025 ம் ஆண்டு கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். நிறுவன அதிகாரி மகேஷ் தேர்வை நடத்தினார். 26 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.