தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/அறிவு கட்டுமான குழுமம்: சமூக அக்கறையுடன் சேவை

அறிவு கட்டுமான குழுமம்: சமூக அக்கறையுடன் சேவை

அறிவு கட்டுமான குழுமம்: சமூக அக்கறையுடன் சேவை


UPDATED : அக் 18, 2026 06:32 AM

ADDED : அக் 18, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 06:32 AM ADDED : அக் 18, 2026 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கட்டடத்துறையில் நம்பிக்கையுடன் தடம் பதிக்கும் பொறியாளர் அரிமா அறிவழகன் அறிவு கட்டுமான குழுமம் நிறுவனத்தின் நிறுவனர்.அறிவழகன் உசிலம்பட்டி பகுதியில் 35 ஆண்டுகளுக்கு மேல் கட்டட பொறியியல் துறையில் அனுபவத்துடன் சிறந்து விளங்குகிறார். சமூக பணிகளிலும் பங்களிப்பை வழங்கி வருகிறார். அரிமா சங்க நுாற்றாண்டு மாவட்ட ஆளுநராக பொறுப்பு வகித்தவர்.

அந்நிறுவனத்தினர் கூறியதாவது:

‘ கட்டட திட்டமிடல், அனுமதி ஆலோசனைகள், கட்டட மதிப்பீடு மற்றும் வங்கி கடனுக்கான சொத்து மதிப்பீட்டு சேவைகள், கட்டட உறுதிச் சான்று தொடர்பான சேவைகள், கட்டமைப்பு பொறியியல் ஆலோசனைகள், கட்டட முகப்புத் தோற்ற வடிவமைப்பு, முப்பரிமாண (3டி) கட்டட வடிவமைப்பு, கட்டுமான செலவு மதிப்பீடு ஆலோசனை, மேற்பார்வை, தரக்கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கி வருகிறோம்.ஒரு பொறியாளரின் வெற்றி அவர் உருவாக்கும் கட்டடங்களின் எண்ணிக்கையில் மட்டுமல்ல. அவர் சமூகத்தில் ஏற்படுத்தும் நேர்மறையான மாற்றங்களிலும் அடங்கியுள்ளது.அந்நோக்கில் உசிலம்பட்டி பகுதியின் நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கண்மாய்களை துார்வாருதல், சுற்றுப்புறங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த சேவைகளில் பங்களித்து வருகிறோம்.

இளம் தலைமுறையினரிடம் தலைமைப் பண்புகளை வளர்க்கும் பயிற்சிகள், இலவச மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஈடுபடுகிறோம். அரிமா சங்கம் மூலம் மனிதநேயம், தலைமைத்துவம், சேவை மனப்பான்மையை முன்னிறுத்தி, மக்களின் வாழ்க்கையில் பயனுள்ள மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். “தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்” என்ற கருத்திற்கேற்ப, எங்கள் பயணத்தில் நம்பிக்கை வைத்து ஆதரவு அளிக்கும் கட்டட உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள், சக பொறியாளர்கள் மற்றும் நலம்விரும்பிகளுக்கு நன்றி. தொடர்பிற்கு 98421 11177.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us