UPDATED : அக் 18, 2026 06:32 AM
ADDED : அக் 18, 2026 06:30 AM
உசிலம்பட்டி மக்களின் ஆடைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வத்தலக்குண்டு ரோடு மெய்யணம்பட்டியில் தாலுகா அலுவலகம் அருகே அக். 23ல் வேலன் சில்க்ஸ் திறக்கப்படுகிறது.
சீமானுாத்து முன்னாள் ஊராட்சித் தலைவரும் தி.மு.க., வடக்கு ஒன்றியச் செயலாளருமான அஜித்பாண்டி முன்னெடுப்பில் உருவாகியுள்ள இந்த ஆடையகத்தில், தரமான பட்டு ஜவுளிகள், பலவித ரகங்களிலான சேலைகள், முன்னணி நிறுவனங்களின் புதிய அறிமுகங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஆடைகளை குடும்பத்துடன் தேர்வு செய்து வாங்கும் வகையில் ஒரே இடத்தில் கிடைக்க உள்ளன.
குறைந்த விலையில் சிறந்த தரம், கவர்ச்சிகரமான ஆடைத் தேர்வுகள் என வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உசிலம்பட்டியின் அடையாளமாக, குடும்பத்தின் ஆடைத் தேவைகளுக்கான புதிய முகவரியாக வேலன் சில்க்ஸ் அமையவுள்ளது. திறப்பு விழா சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
அஜித்பாண்டி கூறுகையில் ‘‘புதிய ஆடையகத்தின் துவக்க விழாவிற்கு வருகை தந்து பிடித்த ஆடைகளை தேர்வு செய்து, பரிசுகளை வாடிக்கையாளர்கள் பெற்றுச் செல்லலாம்’’ என்றார்.
