UPDATED : நவ 22, 2026 04:54 PM
ADDED : நவ 22, 2026 04:54 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை பழங்காநத்தம் கோதண்டராமர் கோயிலில் பாரம்பரிய கோலாட்ட ஊர்வலம் நடந்தது.
இந்நிகழ்வின் தொடக்கமாக நவ.,8 பசுவனுக்கு மண் எடுக்கும் நிகழ்வும், நவ.,20ல் ஊர்காவலனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை, பொங்கல் வைத்தல் நிகழ்வும் நடந்தன. முக்கிய நிகழ்வான பகவானுக்கு கோலாட்ட ஊர்வலத்தில் பகவான், பசுவன் தலையில் சுமந்தபடி எடுத்துச் செல்லப்பட்டு, பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஊர்காவலன் சுவாமி முன்பு வைக்கப்பட்டது. பெண்கள் கோலாட்டம் அடித்து வழிபட்டனர். இதை தொடர்ந்து ஊருணி கரையில் பசுவன் கரைக்கப்பட்டது. அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.
