/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோவில்பாப்பாக்குடி மக்கள் எதிர்ப்பு
/
கோவில்பாப்பாக்குடி மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜன 10, 2025 05:15 AM

மதுரை: கோவில்பாப்பாக்குடி ஊராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
கோவில்பாப்பாக்குடி ஊராட்சியில் சிக்கந்தர் சாவடி, தினமணி நகர் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவ்வூராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலைத்திட்டம் பாதிப்பு, வரி உயர்வு போன்றவை ஏற்படும் எனக்கூறி மாநகராட்சியுடன் இணைய எதிர்ப்பு தெரிவித்து நுாற்றுக்கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்தனர்.
அவர்கள் கூறியதாவது: ஊராட்சியுடன் இருப்பதால் ரோடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் ஊராட்சி மூலம் உடனுக்குடன் கிடைக்கிறது. மாநகராட்சியுடன் இணைந்தால் இதுபோன்ற பணிகள் ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்கப்படும். இங்குள்ள மக்களின் வருமானம் மாநகராட்சி விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப இல்லை. எனவே ஊராட்சியாகவே தொடர விரும்புகிறோம் என்றனர்.

