தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி

மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி

மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி


ADDED : செப் 04, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை தெப்பக்குளம் ஸ்ரீமன் நாயகியார் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோகுலாஷ்டமி விழா நடந்தது.

நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பால கிருஷ்ணன் வேடமணிந்து பங்கேற்றனர். கலைநிகழ்ச்சிகளில் ஆடிப்பாடினர். பள்ளித் தலைவர் ஞானபிரபாகரன் தலைமை வகித்தார். தாளாளர் கீதாபாரதி வரவேற்றார். உபதலைவர் ரகுராஜேந்திரன், பொருளாளர் குப்புசாமி, செயலாளர் ராமசுப்ரமணியன், இணைச் செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தேசிய இளையோர் கூட்டுறவு சங்க தமிழக ஒருங்கிணைப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், சவுபாக்கியாஸ் பாலகுமார் பங்கேற்றனர். முதல்வர் லட்சுமி நன்றி கூறினார்.

திருநகர்: மதுரை விளாச்சேரி அக்ரஹாரம் ஸ்ரீ சைதன்ய விட்டல் மந்திர் வேத குருகுலத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று துவங்கியது.‌ காலை சுப்ரபாதம் முடிந்து யாக பூஜை நடந்தது. மாலையில் கருட வாகனத்தில் வாசுதேவ கிருஷ்ணன், ருக்மணியுடன் புறப்பாடாகினார். இரவு 108 கலச பூஜை துவங்கியது. இன்று காலை கண்ணனை தொட்டிலில் இடும் நிகழ்ச்சி, பஜனை பூஜை முடிந்து உறியடி உற்ஸவம், கிருஷ்ண லீலைகள் உபன்யாசம் நடக்கிறது. செப். 6 அன்று வாசுதேவ கிருஷ்ணன், ருக்மணி தாயார் திருக்கல்யாணம் நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us