ADDED : செப் 04, 2026 07:01 PM
* பெட்ரோல் குண்டு வீச்சு –––– (படம் உண்டு)
சோழவந்தான்: பூமேட்டுத் தெரு சங்கிலி மகன் நாகஅர்ஜுன் 23, தேங்காய் லோடுமேன். நேற்று முன்தினம் இரவு 12:30 மணிக்கு போதை தலைக்கேறிய நிலையில், பெரிய கடை வீதி தனியார் பள்ளி எதிரே சந்தில் அடுத்தடுத்து 2 முறை பெட்ரோல் குண்டுகளை வீசினார். இரண்டாம் முறை வீசும் போது அவரது தலை, உடலில் லேசாக தீப்பற்றியது. போலீசார் அவரை கைது செய்தனர்.
–––
* கிணற்றில் விழுந்தவர் மீட்பு
சோழவந்தான்: மேலக்கால் சிவராஜ் 45, அங்குள்ள தனியார் கிணற்றில் தவறி விழுந்தார். படிகள் இல்லாததால் மேலே வர முடியாமல் பல மணி நேரம் தண்ணீரில் தத்தளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட சிலர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையில் வீரர்கள் வலை மூலம் அவரை மீட்டனர்.
---
* போலீஸ் குவிப்பு மேலுார்: நேற்று இப்பகுதி நிகழ்ச்சிகளில் அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்பதாக இருந்தது. மேலுார் தாலுகாவை சேர்ந்த 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எப்.க்யூ.எல்., மற்றும் விஜி அலைபேசி செயலி மூலம் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். அவர்கள் அமைச்சர் வரும்போது திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அமைச்சர் அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் உட்பட முக்கிய பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
--
