ADDED : செப் 04, 2026 07:01 PM
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் முத்தையா அம்பலம் நினைவுக் கோப்பைக்கான மாநில வாலிபால் போட்டி நடந்தது.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 27 அணிகள் பங்கேற்றதில் அரையிறுதி வரை நாக்அவுட் முறையிலும், அதன்பின் லீக் முறையிலும் போட்டிகள் நடந்தன.
நாக்அவுட்டில் வென்ற சென்னை லயோலா கல்லுாரி, சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை, ஓசூர் அதியமான் கல்லுாரி, கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரி அணிகள் லீக் பிரிவுக்கு தகுதி பெற்றன.
இறுதிப்போட்டியில் லயோலா கல்லுாரி 3 - 2 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்.ஆர்.எம். பல்கலை அணியை வீழ்த்தி ரூ.25 ஆயிரம் வென்றது. எஸ்.ஆர்.எம்., அணி ரூ.15 ஆயிரம் பெற்றது. மூன்றாமிடத்துக்கான போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லுாரி 3 – 0 புள்ளி கணக்கில் அதியமான் கல்லுாரியை வீழ்த்தி ரூ.10ஆயிரம் வென்றது. அதியமான் கல்லுாரி ரூ.7000 வென்றது.
பரிசளிப்பு விழாவில் உடற்கல்வி துறைத் தலைவர் மோகன சுரேந்தர், முதல்வர் பால்ஜெயகர், போலீஸ் டி.எஸ்.பி., ஓய்வு பிரகாஷ், முன்னாள் உடற்கல்வி இயக்குநர் செஸ்டர் மனுவேல், உடற்கல்வி இயக்குநர் நிர்மல்சிங் ராஜ்பெல் பங்கேற்றனர்.
