/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கே.ஆர்.எஸ்., பள்ளி மாணவர்கள் சாதனை
/
கே.ஆர்.எஸ்., பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : அக் 02, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் தமிழிசை சங்கம் சார்பில் அண்ணாமலை செட்டியாரின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, இசை போட்டிகள் நடந்தன.
இதில் கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இசை போட்டியில் 9ம் வகுப்பு மாணவி ஜோவனா முதல் பரிசு வென்றார். பத்தாம் வகுப்பு மாணவி இலக்கியா பேச்சு போட்டியில் 2ம் பரிசு வென்றார். மாணவர்களை முதல்வர் சூர்யபிரபா பாராட்டினார்.