/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
யோகா சாம்பியன்ஷிப் போட்டி கே.ஆர்.எஸ். மாணவர்கள் வெற்றி
/
யோகா சாம்பியன்ஷிப் போட்டி கே.ஆர்.எஸ். மாணவர்கள் வெற்றி
யோகா சாம்பியன்ஷிப் போட்டி கே.ஆர்.எஸ். மாணவர்கள் வெற்றி
யோகா சாம்பியன்ஷிப் போட்டி கே.ஆர்.எஸ். மாணவர்கள் வெற்றி
ADDED : டிச 01, 2024 04:27 AM

மதுரை : மதுரையில் நடந்த மாநில யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., (கே.ஆர்.எஸ்.) பள்ளி மாணவர்கள் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.
மதுரையில் கலாம் பாரம்பரிய கலைகள் அகாடமி, கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 87வது தமிழ்நாடு யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பிஎஸ்.இ., பள்ளியின் பிளஸ் 1 மாணவர் விக்னேஸ்வரன் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் பிளஸ் 2 மாணவி சந்தியா 17 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் முதல் பரிசு பெற்றனர். சிறப்பு பிரிவில் 9ம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதி நாச்சியார் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2ம் பரிசு பெற்றார்.விக்னேஷ்வரன், சந்தியா இருவரும் டிச. 28 முதல் 30 வரை ஜார்கண்டில் நடக்கவுள்ள 43வது தேசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தமிழக அணி சார்பில் தேர்வாகினர். பள்ளி முதல்வர் சூர்யாபிரபா மாணவர்களை வாழ்த்தினார்.

