/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கூடல்நகர் ரயில்வே ஸ்டேஷன் இரண்டாவது முனையமாகிறது: மே 2வது வாரத்தில் ஆய்வு

ADDED : ஏப் 25, 2025 06:40 AM
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இடநெருக்கடியை சமாளிக்கவும், கூடுதல் ரயில்களை இயக்கவும் 2 கி.மீ., தொலைவில் உள்ள கூடல்நகர் ரயில்வே ஸ்டேஷனை இரண்டாவது முனையமாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக மே 2வது வாரத்தில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, தெற்கு ரயில்வே ஆய்வுப்பணியை துவக்கி உள்ளது.
நகரின் வடக்கு பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு எளிதாக செல்ல முடியும். இதன் மூலம் தற்போதைய ரயில் நிலையப் பகுதியில் பயணிகள் கூட்டம் மற்றும் வாகன நெரிசல் குறையும். மேலும் புதிய ரயில் முனையம் பயன்பாட்டிற்கு வந்தால் மதுரையின் தொழில், பொருளாதார முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கும். இதுகுறித்து சில ஆண்டுகளாகவே பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கேற்ப இடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என தெற்கு ரயில்வே தயக்கம் காட்டி வருகிறது.
இந்நிலையில் நேற்று மதுரையில் நடந்த தெற்கு ரயில்வே ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி., வெங்கடேசன் கூறுகையில், ''கூடல்நகர் ஸ்டேஷனை 2வது ரயில் முனையமாக்கும் வகையில் மே 2வது வாரத்தில் ஆய்வுப்பணியை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, தெற்கு ரயில்வே இணைந்து துவங்குகின்றன'' என்றார்.