
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : ஓட்டக்கோவில்பட்டி தன்யாஸ்ரீ 13. தான் படிக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஜன.,26 கிராமசபை கூட்டத்தில் பேசினார். எம்.பி., வெங்கடேசனிடம் மனு கொடுத்தார். அதில் கழிப்பறையை சரிசெய்யவும், பள்ளியை தரம் உயர்த்தவும், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை மாவட்ட நிர்வாகத்திற்கு எம்.பி., பரிந்துரைத்தார். அதன் பேரில் மூன்று கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதற்கான உத்தரவு நகலை எம்.பி., மற்றும் பி.டி.ஓ., ஜெயபால் நேற்று மாணவி தன்யாஸ்ரீ படிக்கும் பள்ளிக்கு சென்று கொடுத்தனர். மேலும் பள்ளியின் தேவை குறித்து பேசிய மாணவியை எம்.பி., பாராட்டினார்.

