ADDED : பிப் 15, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி நாசர் மகன் அப்துல்ரகுமான் 14.
சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த ஜெகதீசன் மகன் 7 ம் வகுப்பு மாணவன் வினித் 12. இருவரும் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது மகபூப்பாளையம் ஜின்னா திடல் அருகே ரோட்டில் கிடந்த ரூ.13 ஆயிரத்து 500ஐ கண்டெடுத்து எஸ்.எஸ்.காலனி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவர்களை கமிஷனர் லோகநாதன் பாராட்டி வெகுமதி அளித்தார்.

