ADDED : ஜன 13, 2024 03:59 AM

மதுரை : மதுரையில் நீண்டகாலமாக மக்களை பாடாய் படுத்தி வரும் குலமங்கலம் ரோடு முழுமையாக சீரமைக்கப்படாமல் உள்ளது.
செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் இருந்து குலமங்கலம் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. பல்வேறு காரணங்களுக்காக கொத்தி குதறப்பட்ட இந்த ரோடு நீண்ட காலமாக சரிசெய்யப்படாததால் அப்பகுதி பொதுமக்களையும், வாகனங்களையும் படுத்தி எடுத்தது.
மழைக்காலங்களில் மக்கள் படும் அவதியை கேட்கவே வேண்டாம். நரக வாழ்க்கையை இந்த நகர மக்கள் அனுபவித்தனர். இந்நிலையில் சமீபத்தில் இந்த ரோட்டை சரிசெய்தனர்.
இன்னும் ஒரு கி.மீ., தொலைவுக்கு இந்த ரோடு சரிசெய்யப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.
தற்போது செல்லுார் கண்மாய் கரையோரம் கற்கள் பதிக்கும் பணி நடக்கிறது. இந்த இடத்தில் ரோடும் பழுதாகி நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி உள்ளதால் பலரும் அவதிப்படுகின்றனர். இந்த ரோடுக்கு எப்போதுதான் விடியல் கிடைக்குமோ தெரியவில்லை.