sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குமரி - ஹூப்ளி சிறப்பு ரயில் பொங்கல் வரை நீட்டிப்பு

/

குமரி - ஹூப்ளி சிறப்பு ரயில் பொங்கல் வரை நீட்டிப்பு

குமரி - ஹூப்ளி சிறப்பு ரயில் பொங்கல் வரை நீட்டிப்பு

குமரி - ஹூப்ளி சிறப்பு ரயில் பொங்கல் வரை நீட்டிப்பு


ADDED : டிச 30, 2024 05:47 AM

Google News

ADDED : டிச 30, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி - ஹூப்ளி இடையே மதுரை வழியாக இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில்கள் (07367/07368) கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பொங்கல் வரை நீட்டிக்கப்படுவதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இன்று (டிச. 30), ஜன. 6, 13 திங்கள் தோறும் மாலை 4:00 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (07367) மறுநாள் மதியம் 3:20 மணிக்கு கன்னியாகுமரி சேரும். மறுமார்க்கத்தில் நாளை (டிச. 31), ஜன. 7, 14 செவ்வாய் தோறும் இரவு 7:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07368) மறுநாள் இரவு 7:35 மணிக்கு ஹூப்ளி செல்லும். இந்த ரயில்கள் நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், கிருஷ்ணராஜபுரம், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு 'எகனாமி' படுக்கை வசதிப் பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்படும். முன்பதிவு துவங்கியது.






      Dinamalar
      Follow us