நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் தாலுகா சித்திரெட்டிபட்டியில் உள்ள பொக்கலாப்பட்டி ஆத்மநாதர் ஜீவ சமாதிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி மூன்று கால யாக சாலை பூஜை, மகா ருத்ர யாகம், மகன்யாசம் நடந்தது.
ஜீவ சமாதியில் உள்ள லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. கும்பாபிஷேக யாக சாலை பூஜைகளை சிருங்கேரி சாரதா வீதம் ஸ்ரீ வேம்பு ஐயர்சாமிகள் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
ஊர் நாட்டாமை வேங்கடரமணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஜெயக்குமார், ஜெகதீஷ்குமார், கணேசன் செய்தனர்.

