
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: வெள்ளலுார் நாடு கட்டச் சோலை பட்டியில் தட்டான் கருப்பன் சுவாமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிப். 1 யாகசாலை பூஜை துவங்கியது.
இரண்டாம் காலம் யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் செல்வகுமார் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார்.
தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெள்ளலுார் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

