ADDED : மார் 21, 2024 02:24 AM

திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி தர்ம சாஸ்தா பரிபாலன சபை கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மார்ச் 18ல் துவங்கிய யாகசாலை பூஜை, நேற்று காலை பூர்த்தியானது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
பின்பு மூலவர்கள் மஹா கணபதி, தர்ம சாஸ்தா, பாலமுருகன், மஞ்சள் மாதா, கருப்பணசாமி, நவகிரகங்கள், சிவபெருமான், காலபைரவருக்கு மஹா அபிஷேகம் முடிந்து அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோயில் நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், சுப்புராமன், சக்திவேல், மணிகண்டன், ஜெமினி, தங்கப்பாண்டி, அன்பு செழியன் பூஜை ஏற்பாடுகள் செய்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தில் அழகுமலையான் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் வீட்டில் உள்ள சுவாமி ஆபரண பெட்டிக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இக்கோயில் அழகுமலையான் பங்காளிகள் பெட்டி எடுப்பு விழா நடந்து 55 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தற்போது கோயில் வீடு கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

