ADDED : செப் 08, 2025 06:20 AM

அவனியாபுரம் : மதுரை அவனியாபுரம் அருணகிரி சுவாமிகள் ஆலயத்தில் கும்பாபிஷேகம், 70 வது குருபூஜை விழா நடந்தது.
நேற்று முன்தினம் யாகசாலையில் விக்னேஸ்வர பூஜை, அனுக்கை பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 2 ம் கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு, புனித நீர் அடங்கிய குடங்கள், விமானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்பு மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
உசிலம்பட்டி:
தேனி ரோட்டில் விஸ்வகுல உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை வாஸ்து பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
நேற்று காலை யாகசாலை பூஜைகளுடன் துவங்கி பூர்ணாகுதி
வழிபாடுகள் நிறைவு
பெற்றபின் புனிதநீர் கொண்டு கோபுர கலசத்திற்கு மகா அபிசேகம் நடந்தது. தொடர்ந்து காமாட்சியம்மனுக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை வழிபாடு முடிந்த பின் அன்னதானம்
வழங்கினர்.
அலங்காநல்லுார்:
ஆதனுாரில் காரணத்தாய், இருபத்தோரு பந்தி தெய்வங்கள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. செப்.6ல் முதல் கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வெள்ளைகுட்டி வகையறா மற்றும் கிராமத்தினர்
செய்திருந்தனர்.