/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விடுமுறை நாளிலும் தமுக்கத்தில் ஒன்றுகூடிய வாசகர்கள்
/
விடுமுறை நாளிலும் தமுக்கத்தில் ஒன்றுகூடிய வாசகர்கள்
விடுமுறை நாளிலும் தமுக்கத்தில் ஒன்றுகூடிய வாசகர்கள்
விடுமுறை நாளிலும் தமுக்கத்தில் ஒன்றுகூடிய வாசகர்கள்
ADDED : செப் 08, 2025 06:19 AM

மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி), பொது நுாலக இயக்ககம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் புத்தகத் திருவிழா செப். 15 வரை நடக்கிறது.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கில், 231 ஸ்டால்களில் லட்சக்கணக்கான புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்குமான புத்தகங்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன.
தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிடலாம். அனுமதி இலவசம். வாங்கும் அத்தனை புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. பள்ளி மாணவர்கள் அடையாள அட்டை காண்பித்து 5 சதவீத கூடுதல் தள்ளுபடி பெறலாம்.
வார நாட்களில் மாலை 4:00 முதல் 6:00 மணி வரை பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தினமும் மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் நடைபெறுகிறது.