sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கோயில்களில் கும்பாபிஷேகம்

/

 கோயில்களில் கும்பாபிஷேகம்

 கோயில்களில் கும்பாபிஷேகம்

 கோயில்களில் கும்பாபிஷேகம்


ADDED : பிப் 02, 2026 05:25 AM

Google News

ADDED : பிப் 02, 2026 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: சமயநல்லுார் பாப்பாத்தி அம்மன் கோயில் தெரு வீர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜன.30ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 5ம் கால யாக பூஜை ஹோமங்கள், தீபாராதனை நடந்தது. மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. அம்மன், விநாயகர், முருகன், கருப்பசாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

மதுரை பூஜாரி, மேலுார் பனையூர் பிள்ளை, கல்லுாரணி, பரவை, ஆத்துார் பிள்ளை வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட கன்னிமார் காமாட்சி அம்மன், பெரியநாயகி அம்மன், ஆகாச கருப்பண்ணசாமி, சோணை சாமி, 21 தெய்வங்கள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

நேற்று காலை 3ம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன், சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.

பேரையூர் பேரையூர் தாலுகா சென்னம்பட்டி காளியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் புனரமைப்பு பணி செய்த பக்தர்கள், முழுக்க கல்லினால் ஆன புதிய மூல பிரகாரம், அர்த்த மண்டபத்துடன் 51 அடி உயர கோபுரம் எழுப்பினர்.

நேற்று பூர்ணாகுதி யாகத்துடன் கடம் புறப்பாடாகி கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் முடிந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us