ADDED : ஜூன் 29, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் காமாட்சி அம்மன் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 2ல் நடக்கிறது. நேற்று வாஸ்து சாந்தியுடன் பூஜைகள் துவங்கின.
ஜூலை 1 வரை யாகசாலை பூஜை நடைபெறும். ஜூலை 2 ஆறாம் கால பூஜை முடிவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளுதல் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் முருகன், செயல் அலுவலர் வாணி மகேஸ்வரி செய்துள்ளனர்.