நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகா மோதகத்தில் மலைமீது அமைந்துள்ள ருக்மணி சத்தியபாமா சமேத கோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
ஜூலை 10 ம் தேதி முதல் கால யாக சாலை ஆரம்பமானது. ஜூலை 11ம் தேதி இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால பூஜையும் நடந்தன.
ஜூலை 12ம் தேதி அனைத்து விமானங்கள், பிம்பங்களுக்கு கண் திறப்பு, துவார பூஜை, பாலிகை பூஜை கும்ப பூஜை, வேத விண்ணப்பம் நடந்தது. நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது அதன் பின் அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று மாலை திருக்கல்யாணம், கருட சேவை, கிரிவலப் புறப்பாடு, திருக்கல்யாண விருந்து நடந்தது. ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.