
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
ஆக. 20ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு மூலவருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்பு பரிவார தெய்வங்களான ராக்காயி, இருளாயி, கருப்பாயி, கோட்டைக் கருப்பு, சோனையாசாமி உள்பட 21 தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி மகாபிஷேகம் நடந்தது.