ADDED : ஆக 30, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: மேலக்கால் பத்மாவதி, அலர்மேல்மங்கை சமேத வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
இதையொட்டி ஆக.29 ல் கணபதி ஹோமம், புண்யகாவாசனம், ரக் ஷா பந்தனம், முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தன. ஆக.30 ல் 2ம் கால யாக சாலை பூஜைகள், நாடி ஸந்தானம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி மூலவர்களின் மீது புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஜெய்சங்கர், அர்ச்சகர் சங்கரநாராயணன் தலைமையில் பூஜைகள் நடந்தன. நிர்வாக அலுவலர் ராஜா, பணியாளர்கள் ஏற்பாடு செய்தனர்.
