/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மூடப்பட்டு 13 வருஷமாச்சு அரசு பஸ்களுக்கு என்னாச்சு 'பார்க்கிங்' ஆக மாறிய குன்றத்து பஸ் ஸ்டாண்ட்

ADDED : அக் 06, 2025 03:58 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மேம்பாலம் பணிகளுக்காக முடக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் 13 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு முன்பு பஸ் ஸ்டாண்டில் இருந்து பிற பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப் பட்டன. 13 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால் ஊருக்குள் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேம்பால பணிகள் முடிந்து சில ஆண்டுகளில் ஒருபுறம் சர்வீஸ் அமைக்கப்பட்டது.
தென்பரங்குன்றம், சம்பக்குளம் செல்லும் அரசு டவுன் பஸ்கள் மேலரத வீதி, பெரியரத வீதி, கிரிவலப் பாதை வழியாக சென்று திரும்பின. திருநகர், திருமங்கலம் செல்லும் அரசு டவுன் பஸ்கள் மேம்பாலத்தின் வழியாக செல்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு மேம்பாலத்தின் மற்றொரு பகுதியிலும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது.
ஆனால் திருப்பரங்குன்றத்தில் இருந்து அரசு டவுன் பஸ்கள் இன்னும் இயக்கப்படவில்லை.
திருப்பரங்குன்றம் பஸ் ஸ்டாண்ட் பகுதி, கோடாங்கி தோப்பு தெரு, கோட்டை தெரு, தென்பரங்குன்றம் பகுதி மக்கள் மதுரை மற்றும் வெளியூர்களுக்கு செல்ல 2 கி.மீ., நடந்து புளியமரம் பஸ் ஸ்டாப்பிற்கு சென்று தான் பஸ் ஏறி செல்கின்றனர். இரவில் அவதிக்கு உள்ளாகின்றனர்.
பல ஆண்டுகளாக அரசு டவுன் பஸ் போக்குவரத்து இல்லாததால் திருப்பரங்குன்றம் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து நிற்கின்றன. திருப்பரங்குன்றத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.