ADDED : ஜூன் 20, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை மாவட்டத்தில் முதல்முறையாக வேளாண் துறை சார்பில் 2000 ஏக்கரில் குறுவைத் தொகுப்பு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது: மதுரையில் ஒரு விவசாயிக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் 2000 ஏக்கர் குறுவைத் தொகுப்பு மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கான நெல் இயந்திர நடவுக்கு ஏக்கருக்கு ரூ.4000 மானியம். நடவுக்கான விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் 176 டன் நெல் விதைகள் இருப்பில் உள்ளன.
இதை 50 சதவீத மானியத்தில் வாங்கலாம். உயிர் உரங்களுக்கு 50 சதவீதம், நுண்ணுரங்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும். விவசாயிகள் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.