/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நலிவுற்றோருக்கு கைகொடுக்கும் கே.வி.ஐ.சி., திட்டம் மண்டல இயக்குநர் செந்தில்குமார் தகவல்
/
நலிவுற்றோருக்கு கைகொடுக்கும் கே.வி.ஐ.சி., திட்டம் மண்டல இயக்குநர் செந்தில்குமார் தகவல்
நலிவுற்றோருக்கு கைகொடுக்கும் கே.வி.ஐ.சி., திட்டம் மண்டல இயக்குநர் செந்தில்குமார் தகவல்
நலிவுற்றோருக்கு கைகொடுக்கும் கே.வி.ஐ.சி., திட்டம் மண்டல இயக்குநர் செந்தில்குமார் தகவல்
ADDED : அக் 30, 2025 04:12 AM
மதுரை: கதர் கிராமத்தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி.,) கிராமத்தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இலவச தொழில்திறன் பயிற்சி அளிக்கப்படுவதாக கோட்ட இயக்குநர் செந்தில்குமார் ராமசாமி தெரிவித்தார்.
மதுரையில் பெட்கிராட் நிறுவனத்தில் கே.வி.ஐ.சி., சார்பில் வாழைநார் பிரித்தெடுத்தல் மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கும் 12 நாட்கள் பயிற்சிக்கான துவக்க விழா நடந்தது. பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்றார். நிர்வாக இயக்குநர் சுப்புராம் தலைமை வகித்தார். தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி, ஒருங்கிணைப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.
செந்தில்குமார் ராமசாமி பேசியதாவது: மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வாழை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வாழைநாரை பக்குவப்படுத்தி சிறிய கருவிகள் மூலம் அலங்காரப் பொருட்கள் தயாரிக்கலாம். வாழைத்தண்டை பிரித்து கூடை, தட்டு, கிண்ணம் போன்ற பொருட்களை தயாரிக்கலாம். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பயிற்சி, பயிற்சிக்கான கருவிகள் இலவசம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கருவிகள் வாங்க 10 சதவீதம், மற்றவர்கள் 20 சதவீத முதலீடு செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசின் விருதுபெற்ற கைவினைக்கலைஞர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
உற்பத்திப் பொருட்களை, காதி நிறுவன லோகோவை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள கே.வி.ஐ.சி.,யின் 9000 காதி பவன்களில் விற்பனை செய்யலாம். திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வனப்பகுதி அதிகமாக இருப்பதால் தேன்புரட்சி திட்டம் என்ற பெயரில் தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கிறோம். கொடைக்கானல் பகுதியில் 500 தேன் பெட்டிகளை இலவசமாக வழங்கியுள்ளோம். மண்பாண்டம் தயாரிப்பு, சாண எரிவாயு உற்பத்தி, அகர்பத்தி, தோல் தொழில், மர வேலை, அடிப்படை எலக்ட்ரீசியன் பயிற்சி அளிக்கப் படுகிறது. பயிற்சிக்கு பின் தொழில் தொடங்க 25 முதல் 35 சதவீத மானியத்துடன் வங்கிக்கடன் பெற்றுத் தருகிறோம் என்றார்.
பயிற் சியாளர் செல்வி வாழைநாரில் பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்தார். கே.வி.ஐ.சி., அலுவலர் கலிபூர் ரகுமான் திட்டங்களை விளக்கினார். பயிற்சியாளர்கள் முத்துச்செல்வி, விஜய வள்ளி, ஷிபா ஏற்பாடு செய்த னர்.

