/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை கோட்ட ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம்; ரயில்கள் நிறுத்தப்படும் சூழலால் பயணிகள் அச்சம்
/
மதுரை கோட்ட ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம்; ரயில்கள் நிறுத்தப்படும் சூழலால் பயணிகள் அச்சம்
மதுரை கோட்ட ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம்; ரயில்கள் நிறுத்தப்படும் சூழலால் பயணிகள் அச்சம்
மதுரை கோட்ட ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம்; ரயில்கள் நிறுத்தப்படும் சூழலால் பயணிகள் அச்சம்
ADDED : செப் 25, 2025 03:41 AM

மதுரை ரயில்வே கோட்டத்தில் ஓடும் தொழிலாளர்கள் பிரிவில் 125க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. 625 பேர் செய்ய வேண்டிய பணிகளை 500 பேர் செய்கின்றனர். இதனால் சரியான ஓய்வின்றி, விடுப்பு கிடைக்காமல் மன அழுத்தத்துடன் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர்.
2 ஆண்டுகளில் 21 ஓடும் தொழிலாளிகள் மருத்துவ தகுதி இழப்பு அடைந்துள்ளனர். 52 வயது மூத்த ஓட்டுநர் ஒருவர், பணிச்சுமையால் உயிரிழந்துள்ளார். ஓட்டு நர்களுக்கு குறைந்தது 16 மணி நேரம் ஓய்வு தர வேண்டும் என ரயில்வே சட்டம் உள்ளது. ஆனால் போதிய ஓய்வின்றி பணி ஒதுக்கப்படுகிறது.
மற்ற கோட்டங்களில் 36 மணி நேரத்தில் பணி முடித்து சரக்கு ஓட்டுனர்கள் டிப்போவுக்கு செல்லும் நிலையில், மதுரை கோட்டத்தில் 72 மணி நேரமாகியும் டிப்போவிற்கு திரும்ப முடியாத நிலை உள்ளது. 2 ஆண்டுகளாக பதவி உயர்வும் இல்லாமல், அதிகநேரம் பணிபுரியும் நிலை உள்ளது. எனவே ஓட்டுநர்களுக்கு போதிய ஓய்வு வழங்க வேண்டும், பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கென தனித்தனியாக பணிப் பட்டியல் தயார் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 26ல் நிர்வாகத்துடன் சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஒரு மாதத்தில் புதிய பணிப்பட்டியல் அளிக்கப் படும் என நிர்வாகம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆனால் 2 மாதங் களுக்கு மேல் அதனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தியதால் எஸ்.ஆர்.எம்.யூ., உதவிக் கோட்டச் செயலாளர் ராம்குமார், ஓடும் தொழிலாளர் பிரிவு தலைவர் ரவிசங்கர், செயலாளர் அழகுராஜா, முன்னாள் கோட்ட தலைவர் தாமரை செல்வன் ஆகியோர் தலைமையில், 150க்கும் மேற்பட்ட ஓடும் தொழிலாளர்கள் நேற்று உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்தனர். திருநெல்வேலியில் 40 பேரும், செங்கோட்டையில் 25 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில்கள் ஆங்காங்கே நிற்கும் சூழல் ஏற்பட்ட தால் கோட்ட மேலாளர் அறிவுறுத்தல்படி, மூத்த மின் பொறியாளர் மஞ்சு நாத் யாதவ் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்னை களுக்கு தீர்வு காண உதவி மேலாளர், அதிகாரி களுடன் இன்று சிறப்புக் கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.