ADDED : செப் 13, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை லேடிடோக் கல்லுாரியில் மேம்படுத்தப்பட்ட ஆய்வக கருவியியல் பயிற்சியாளர்களுக்கான மாநில பயிற்சிப் பட்டறையை முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தார். கருவியியல் மைய ஒருங்கிணைப்பாளர் பிரிசில்லா வரவேற்றார். பல்வேறு கல்லுாரிகளின் ஆய்வக கருவியியல் பயற்சியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.
கோவை உயர்கல்வி நிறுவன இயற்பியல் துறை பேராசிரியர் சசிரேகா, தேசிய முதுநிலை ஆய்வாளர் ஷர்மிளா ஆகியோர் பயிற்சி அளித்தனர். பேராசிரியைகள் சிந்தியா, ஜெயந்தி கலைவாணி, சில்வியா ரீட்டா, ஆய்வக உதவியாளர்கள், பயிற்றுநர்கள் இன்னசென்ட், பவானி, டேவிட் மசிலாமணி, ஒனாசிஸ் சாலமன், ஜெயந்தி, டெலிசியா ஒருங்கிணைத்தனர். பேராசிரியை பிரிசில்லா ஸ்வீட்லின் நன்றி கூறினார்.
