ADDED : அக் 16, 2024 04:37 AM
மதுரை : மதுரை அருகே வரிச்சியூரில் கல்லுாரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவரின் உறவினரான கட்டடத் தொழிலாளி மதிவாணன் 28, கொலை செய்யப்பட்டார்.
வரிச்சியூரை சேர்ந்த கல்லுாரி மாணவர் தனபால் 18. இவர் செப்.29ல் நாடார்மங்கலம் கிரானைட் நிறுவனம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் வரிச்சியூர் கருப்பு என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கருப்புவின் உறவினர் வீரன் மகன் மதிவாணன், நேற்று வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கருப்பாயூரணி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கருப்பையா 55, அவரது மகன் ரஞ்சித் ஆகியோர் மதிவாணனை கொலை செய்தது தெரிய வந்தது. கருப்பையா, ஏற்கனவே கொலையான கல்லுாரி மாணவர் தனபாலின் தந்தை. ரஞ்சித் அவரது சகோதரர். இதனால் தனபால் கொலைக்கு பழிக்குப்பழியாக மதிவாணன் கொல்லப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.