/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்னமும் சம்பளம் கிடைக்கல கால்நடை துறையில் புலம்பல்
/
இன்னமும் சம்பளம் கிடைக்கல கால்நடை துறையில் புலம்பல்
இன்னமும் சம்பளம் கிடைக்கல கால்நடை துறையில் புலம்பல்
இன்னமும் சம்பளம் கிடைக்கல கால்நடை துறையில் புலம்பல்
ADDED : பிப் 11, 2025 05:14 AM
மதுரை: 'கால்நடை பராமரிப்புத்துறையில் பணியாற்றும் டாக்டர், ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர்களில் பாதி பேருக்கு ஜனவரி சம்பளம் வழங்கப்படவில்லை' என தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தினர் தெரிவித்தனர்.
மாவட்ட தலைவர் முருகேஸ்வரி, பொருளாளர் வசந்தமுனியம்மாள் கூறியதாவது: கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அரசாணை வெளியிட்டு சம்பளம் வழங்கப்படுகிறது.
2024 டிசம்பர் முடிவதற்கு முன்பே அரசாணை வெளியிட்டிருந்தால் தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை டாக்டர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் என 6,818 பேருக்கும் சம்பளம் உடனடியாக கிடைத்திருக்கும்.
தாமதமாக அரசாணை வழங்கிய நிலையில் அதிலும் பாதி பேருக்கு சம்பளம் கிடைக்கவில்லை. மதுரை, திருமங்கலம் கோட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் மட்டும் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளோம். வீட்டுச் செலவுகளை சமாளிக்க முடியாமல் வெளியில் கடன் வாங்கி தவிக்கிறோம். சம்பளம் வழங்கக் கோரி இணை இயக்குநர் சுப்பையனிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றனர்.

