
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே அ.புதுப்பட்டி ராமகிருஷ்ணன் கோயில் 74ம் ஆண்டு உற்ஸவ விழா மூன்று நாட்கள் நடக்கின்றன.
பிப்.,2 இரவு உலக மக்கள் நன்மை வேண்டி, விவசாயம் செழிக்க விளக்கு பூஜை நடந்தது. அருளாளர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார். ராஜேஸ்வரி திருவிளக்கு பூஜை வழிபாட்டு பாடல்கள் பாடினார். நேற்று உச்சிக்கால பூஜையுடன் ராமகிருஷ்ணர், விநாயகர், புதுப்பட்டிஸ்வரர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் மாவிளக்கு எடுத்தனர். சப்பரத்தில் சுவாமி முளைப்பாரி ஊர்வலத்துடன் வீதி உலா வந்தார். இன்று (பிப்.,4) மஞ்சள் நீராடல் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.