ADDED : ஆக 13, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்; மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் உலக நன்மை, மாணவியர் படிப்பு சிறக்க வேண்டி 108 விளக்கு பூஜை நடந்தது. பொருளாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். முதல்வர் பொன்னி, நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர். சவுராஷ்டிரா கல்லுாரி சுயநிதிப் பிரிவு சார்பில் நடந்த விளக்கு பூஜைக்கு முதல்வர் ஸ்ரீநிவாசன் தலைமை வகித்தார்.
டீன் கவிதா துவக்கி வைத்தார். தேர்வு கட்டுப்பாட்டாளர் துரைசாமி, துறைத் தலைவர் அஞ்சனபிரியா, பேராசிரியர்கள் தேவிகா, ஹேமபிரியா ஒருங்கிணைத்தனர்.