நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் இரட்டை அக்ரஹாரம் மங்கள ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், மாணவர்களுக்கு கல்வி வேண்டியும் விளக்கு பூஜை நடந்தது.
ராஜேஸ்வரி குழுவினர் அம்மன் பக்தி பாடல் பாடி வழிபட்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. பிராமண சங்க தலைவர் ராமசுப்பிரமணியன், செயலாளர் பாலமுரளி, பொருளாளர் பிரசாத் சர்மா, மகளிரணி தலைவி ஆண்டாள் வித்யா ஏற்பாடு செய்தனர்.