/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நில அளவை அலுவலர்கள் போராட்டம் அறிவிப்பு
/
நில அளவை அலுவலர்கள் போராட்டம் அறிவிப்பு
ADDED : ஜூன் 17, 2025 01:05 AM
மதுரை : தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட போவதாக அறிவித்துள்ளனர்.
குறுவட்ட அளவர் பதவிகளை வழங்க வேண்டும். பணிச்சுமையை குறைக்க வேண்டும். நிலஅளவை அலுவலர்களின் அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தனியார்மய வடிவமான லைசென்ஸ் சர்வே முறையை கைவிட்டு, காலமுறை ஊதியத்தில பணியமர்த்த வேண்டும். புல உதவியாளர்களையும் காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக புதிய போராட்ட உத்திகளை அறிவித்துள்ளனர். மாநில செயலாளர் முத்துமுனியாண்டி, மதுரை நிர்வாகிகள் ராஜ்குமார், ரகுபதி கூறுகையில், ''சமீபத்தில் கொடைக்கானலில் மாநில செயற்குழுக் கூட்டம் மாநில தலைவர் ராஜா தலைமையில் நடந்தது. இதில் போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி நிலஅளவைத்துறை ஊழியர்கள் மத்தியில் இன்று (ஜூன் 17) முதல் ஜூன் 24 வரை பிரசார இயக்கம் நடத்துவது, சென்னையில் ஜூலை 3ல் பெருந்திரளாக கூடி முறையீடு செய்வது, ஜூலை 15, 16ல் வேலை நிறுத்தம் செய்வது, ஜூலை 9ல் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவதற்காக ஒருநாள் வேலை நிறுத்தம் செய்வது என முடிவெடுத்துள்ளோம்'' என்றனர்.