/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தின் கடைசி கூட்டம்
/
திருமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தின் கடைசி கூட்டம்
ADDED : நவ 28, 2024 05:31 AM
திருமங்கலம்: திருமங்கலம் ஒன்றியத்தின் கடைசி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் லதா தலைமை வகித்தார். துணைத் தலைவர் வளர்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீதா, சந்திரகலா முன்னிலை வகித்தனர்.
பா.ஜ., கவுன்சிலர் ஓம்ஸ்ரீமுருகன்: கிராமங்களில் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் பரவாமல் தடுக்க வேண்டும். மூன்று ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளுக்கு குளோரின் பயன்படுத்துவதில்லை.
அதனை மழைக்காலத்திலாவது பயன்படுத்த வேண்டும். பள்ளிகளில் ரூ. 5.5 லட்சம் செலவில் சுகாதார பணிகள் மேற்கொண்டதாக அதிகாரிகள் கணக்கு எழுதி உள்ளனர். என்னென்ன செயல்பாடுகள் நடந்தன என்பது குறித்து விளக்க வேண்டும். பள்ளிகளில் கழிப்பறை உட்பட எதுவும் சுகாதாரமாக இல்லை என்றார்.
கவுன்சிலர் சிவபாண்டி: செக்கானுாரணி ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை - தேனி நெடுஞ்சாலையில் இருப்பதால் அதை அவசர சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும் என்றார்.
தி.மு.க., கவுன்சிலர் பரமன்: சாத்தங்குடி ஊராட்சி புலியூரில் குளியல் தொட்டி பணிமுடிந்து ஆறு மாதம் ஆகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார். ஒன்றியத்தின் கடைசி கவுன்சில் கூட்டம் என்பதால் அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.