/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின்சார ஆட்டோக்களுக்கு தடை கோரி வழக்கு
/
மின்சார ஆட்டோக்களுக்கு தடை கோரி வழக்கு
ADDED : நவ 27, 2025 05:36 AM
மதுரை: மதுரை அறிவு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரையில் 16 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. இதனால் டீசல், எல்.பி.ஜி.,ஆட்டோக்களுக்கு புதிதாக உரிமம் வழங்க 2015 ல் கலெக்டர் தடை விதித்தார். மின்சார பேட்டரிகளில் இயங்கும் ஆட்டோக்களுக்கு தற்போது உரிமம் வழங்கப்படுகிறது. இதனால் மதுரையில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும். சுற்றுச்சூழல் மாசுபடுவது குறையாது. மின்சார ஆட்டோக்களுக்கு உரிமம் வழங்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சகா ஆஜரானார். நீதிபதிகள் தமிழக போக்குவரத்துறை செயலர், கமிஷனர், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி டிச.,11 ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

