ADDED : நவ 27, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா டிச.3 ல் நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் அதிகமானோர் அங்கு செல்வர் என்பதால் டிச.2 முதல் டிச.5 வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது.
பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும், முன்பதிவில்லா பஸ்களுக்காக காத்திருப்பதை தவிர்க்கவும், கடைசி நேர கூட்ட நெரிசல், காலவிரயத்தை தவிர்க்கவும் டி.என்.எஸ்.டி.சி., அலைபேசி செயலி மற்றும் இணையவழியிலும் (https://www.tnstc.in) முன்பதிவு செய்யலாம். பயணிகளின் வசதிக்காகவும், வழிகாட்டவும் முக்கிய பஸ்ஸ்டாண்டுகளில் இதற்கென கண்காணிப்பாளர்கள், நிலைய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மேலாண் இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.

