/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் வழக்கறிஞர் தேர்வு மையம்: உயர்நீதிமன்றம் தள்ளுபடி உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ADDED : செப் 14, 2025 04:09 AM
மதுரை: அகில இந்திய வழக்கறிஞர் தேர்விற்கான மையத்தை மதுரையில் அமைக்க உத்தரவிட தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரை பாலமுருகா தாக்கல் செய்த மனு:
அகில இந்திய வழக்கறிஞர் தேர்விற்கான மையத்தை மதுரையில் அமைக்கக் கோரி இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. பார் கவுன்சில்கள் சார்பில் வழக்கறிஞர்கள் மகாலட்சுமி, நிரஞ்சன் எஸ். குமார் ஆஜராகினர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அகில இந்திய வழக்கறிஞர் தேர்வு நடத்துவதற்கான மையம் குறித்து அறிவிப்பு வெளியிட இந்திய பார் கவுன்சிலுக்கு தனி சிறப்புரிமை அதிகாரம் உள்ளது. நீதிமன்றங்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே வழிகாட்டுதல்களை நீதிமன்றங்கள் பிறப்பிக்க முடியும். தேர்வு மைய அறிவிப்பை வெளியிட இந்திய பார் கவுன்சில் நிர்வாக ரீதியாக முடிவு செய்ய வேண்டும். மனுவில் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.