ADDED : பிப் 29, 2024 05:47 AM
திருமங்கலம் : திருமங்கலம் - மதுரை ரோட்டில் நீதிமன்றம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனைக்கு செல்லும் முன்சீப் கோர்ட் ரோடு பிரிவு, பள்ளிகள், வங்கிகள், நகர் பஸ் ஸ்டாண்ட், வெளியூர் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்டவை உள்ளன. இந்த ரோட்டில் பஸ்கள், டூவீலர்களில் வருவோர், கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் விபத்து அபாயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
எனவே திருமங்கலம் - விருதுநகர் ரோட்டில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் முன்சீப் கோர்ட் ரோடு பிரிவு, தனியார் பெட்ரோல் பங்க் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராமசாமி, செயலாளர் அறிவொளி, நிர்வாகிகள் கிருஷ்ணன், தங்கப்பாண்டி, அழகுமலை, விஜயகுமார், ராஜசேகரன் ஆகியோர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். 'விரைவில் நடவடிக்கை எடுப்பதாக' அவர்கள் உறுதி அளித்தனர்.

