ADDED : ஆக 27, 2025 07:00 AM
மதுரை : மதுரை உலகத் தமிழ்ச் சங்க காட்சிக் கூடத்தில்சிறப்புச் சொற்பொழிவு நடந்தது.இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார்.
அவர் பேசுகையில், சங்கத் தமிழரின் அறம் சார்ந்த வாழ்வியலை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் நோக்கில் சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம் நிறுவப்பட்டுள்ளது.'அறம்' என்ற சொல் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. உலகெங்கும் வாழும் 800 கோடி மக்களில் 14 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள்என்பது நமக்கான பெருமை என்றார்.
ஆஸ்திரேலிய தமிழ் வளர்ச்சி மன்றநிறுவனர் சந்திரிகா சுப்ரமணியன், 'சங்க இலக்கியத்தில் அறக்கோட்பாடுகள்' என்ற தலைப்பில் பேசினார். யாதவர் கல்லுாரி தமிழ் உயராய்வு மைய தலைவர் பரந்தாமன், இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் செல்வம் ராமசாமி பங்கேற்றனர்.
காட்சிக்கூட வழிகாட்டிகள் புஷ்பநாச்சியார், ஜான்சிராணி நன்றி கூறினர்.உலகத் தமிழ்ச்சங்க ஆய்வு வளமையர் ஜான்சிராணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம், இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை செய்திருந்தன.

