நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அம்பிகா மகளிர் கலைக் கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதலீட்டாளர் நல பாதுகாப்பு (டான்பிட்) நீதிமன்ற நீதிபதி ஜோதி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டம், குடும்ப வன்முறைச் சட்டம், சொத்துரிமை சட்டம், பெண் உரிமைகள்சட்டம், பணிபுரியும் இடத்தில் பெண்களுக்குநிகழும் பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டம், பாலியல் குற்றங்களில்இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டங்கள், பாதிக்கப்பட்டோர் எந்தெந்த அமைப்புகளை அணுகலாம் குறித்து பேசினார்.
சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சரவண செந்தில்குமார் சட்ட உதவி பெறுதல், தற்காப்பு வழிமுறைகளை பேசினார். கல்லுாரி முதல்வர் சரளா தேம்பாவணி, வழக்கறிஞர் வசந்தி பங்கேற்றனர்.