ADDED : நவ 12, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: நாச்சிகுளத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு உத்தரவுபடி வாடிப்பட்டி வட்ட சட்ட பணிக்குழு சார்பில் இலவச சட்ட தினத்தையொட்டி சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவர் சுகுமாறன் தலைமை வகித்தார். சட்டப்பணி குழு வழக்கறிஞர்கள் ராமசாமி, முத்துமணி, விஜயகுமார், சீனிவாசன், அழகர்சாமி, தயாநிதி இலவச சட்ட உதவிகள், பல்வேறு சட்டங்கள் குறித்து விளக்கினர். ஊராட்சி செயலாளர் கதிரேசன் நன்றி கூறினார்.