ADDED : மே 27, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் விநாயகபுரம் காலனியில் உள்ள நுாலக வளாகத்தில் மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வழக்கறிஞர்கள் அரிச்சந்திரன், விஜயகுமார் பேசினர். வாடிப்பட்டி வட்ட சட்டபணிகள் குழுவும், சோழவந்தான் இதய நிறைவு தியானம் அமைப்பினரும் நடத்தினர். ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்ச்செல்வி, விக்னேஷ் மாணிக்கம் கலந்து கொண்டனர். தன்னார்வலர்கள் ரமேஷ், கவிதா, அருணாசலம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.