UPDATED : அக் 17, 2026 06:56 PM
ADDED : அக் 17, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
பேரையூர்:
பேரையூர், தும்மநாயக்கன்பட்டி, கீழப்பட்டி, சந்தையூர், சாப்டூர் பகுதிகளில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.
உள்ளூர் விற்பனை போக மதுரை மார்க்கெட் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது விளைச்சல் குறைவாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளது. விவசாயிகளிடம் கிலோ ரூ.230க்கு கொள்முதல் செய்து ரூ.300க்கு வியாபாரிகள் விற்கின்றனர். விளைச்சல் குறைவாக இருந்தாலும் நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
