UPDATED : அக் 17, 2026 09:48 PM
ADDED : அக் 17, 2026 06:54 PM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான வலு துாக்குதல் போட்டி சாத்துார் எஸ்.ஆர்.என்.எம். கல்லுாரியில் நடந்தது.
இதில் மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியின் பி.பி.ஏ., இரண்டாமாண்டு மாணவர் அபிஷேக் 66 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். 74 கிலோ எடை பிரிவில் எம்.சி.எச்.எம்., துறையின் மூன்றாமாண்டு மாணவர் பாலமுரளி வெண்கலம் வென்றார். கல்லுாரிச் செயலாளர் டாக்டர் எல். ராமசுப்பு பாராட்டினார்.
