sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆடுவோமே பள்ளு பாடுவோமே... மதுரையில் சுதந்திர தின விழா கோலாகலம்; சிறந்த பணி, சேவைக்காக 314 பேருக்கு விருது

/

ஆடுவோமே பள்ளு பாடுவோமே... மதுரையில் சுதந்திர தின விழா கோலாகலம்; சிறந்த பணி, சேவைக்காக 314 பேருக்கு விருது

ஆடுவோமே பள்ளு பாடுவோமே... மதுரையில் சுதந்திர தின விழா கோலாகலம்; சிறந்த பணி, சேவைக்காக 314 பேருக்கு விருது

ஆடுவோமே பள்ளு பாடுவோமே... மதுரையில் சுதந்திர தின விழா கோலாகலம்; சிறந்த பணி, சேவைக்காக 314 பேருக்கு விருது


ADDED : ஆக 16, 2025 12:48 AM

Google News

ADDED : ஆக 16, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: இந்தியாவின் 79வது சுதந்திரதின விழா மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கோலாகலமாக நடந்தது. தேசியக் கொடியை ஏற்றிவைத்த கலெக்டர் பிரவீன்குமார் 42 பேருக்கு ரூ.42 லட்சத்து 21 ஆயிரத்து 287 மதிப்பில் நல உதவிகளை வழங்கினார்.

அரசுத்துறைகளில் சிறப்பாக பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் சமூக சேவகர்கள் 314 பேரை பாராட்டி சான்று, விருதுகளை கலெக்டர் வழங்கினார். இவர்களில் மருத்துவ சேவைக்காக டாக்டர் பழனியப்பன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பசுமை செயல்பாட்டாளர் அசோக்குமார், திடீர்நகர் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் அடங்குவர். பள்ளி, கல்லுாரி மாணவர்களின் வண்ணமிகு கலை நிகழ்ச்சி நடந்தது. தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.,பிரேம் ஆனந்த் சின்கா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், டி.ஐ.ஜி.,அபினவ்குமார், எஸ்.பி.,அரவிந்த், டி.ஆர்.ஓ., அன்பழகன் பங்கேற்றனர்.

நீதிமன்றம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தேசியக் கொடியை நிர்வாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ஏற்றினார். சி.ஐ.எஸ்.எப்., வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். வீரர்களின் சாகசக நிகழ்ச்சி, நீதிமன்ற வளாக அரசு மருந்தகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தேசியக் கொடியை ஏற்றினார். வழக்கறிஞர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

பள்ளி, கல்லுாரி மதுரை அருப்புக்கோட்டை ரோடு கே.ஆர்.எஸ்., சி.பி.எஸ்.இ., பள்ளியில் முதல்வர் சூர்யபிரபா கொடியேற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்சஸ் கல்லுாரியில் முதல்வர் பாலன் முத்துராமலிங்கம் கொடியேற்றினார். மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் முதல்வர் சுஜாதா கொடியேற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் பாண்டியராஜன் செய்திருந்தார்.

சிவகாசி நாடார் மெட்ரிக் பள்ளியில் காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் கொடியேற்றினார். பள்ளிச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். முதல்வர் மீனாட்சி முன்னிலை வகித்தார். திருநகர் டவுன் லயன்ஸ் சங்கம் சார்பில் ஹார்விபட்டி ஜோதி நடுநிலைப் பள்ளியில் தலைவர் மணிமாறன் கொடியேற்றினார். தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமையாசிரியை சித்ரா, உதவி தலைமையாசிரியர் வெங்கட்ராஜ், ஆசிரியர்கள், சங்க உறுப்பினர்கள் மோகன், அமல்ராஜ், நித்தியானந்த மூர்த்தி, சுந்தர வடிவேல் கலந்து கொண்டனர். கூடல்நகர் ஆல்வின் மெட்ரிக் பள்ளியில் மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் பதிவாளர் சிவக்குமார் கொடியேற்றினார். தாளாளர் தேவன்குமார், முதல்வர் தங்கமுனியாண்டி, துணைமுதல்வர் சவுந்தர்யா கலந்து கொண்டனர்.

திருமங்கலம் மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஈஸ்டர் ஜோதி கொடியேற்றினார். ஆசிரியர் இந்திரன், சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்தும், நாடு வல்லரசாக கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அவனியாபுரம் எஸ்.பி.ஜே., மெட்ரிக் பள்ளியில் முதல்வர் அபர்ணா தலைமையில் அரசு மருத்துவமனை சிறுநீரகவியல் டாக்டர் ஜெகன் அருணாச்சலம் கொடியேற்றினார். பீ.பி.குளம் தனபால் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தினேஷ் சேவியர் கொடியேற்றினார். ஆசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். ஆசிரியர் மல்லிகா நன்றி கூறினார். ஆசிரியர் வெள்ளைத்தாய் தொகுத்து வழங்கினார்.

நாகமலை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் தாளாளர் செந்தில் ரமேஷ் தலைமையில் ராணுவ 7ம் படையணி நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் கொடியேற்றினார். முதல்வர் லதா திரவியம், துணை முதல்வர் அனிதா கரோலின், தலைமையாசிரியர் ஹெப்சிபா சலோமி ராணி ஆகியோர் பங்கேற்றனர். கருமாத்துார் புனித கிளாரட் பள்ளியில் தலைமையாசிரியர் சூசைமாணிக்கம் கொடியேற்றினார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ஆசிரியர் பாத்திமா பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் சவுந்திரபாண்டியம்மாள், கவிதா, மாரியப்பன், தீபா ஒருங்கிணைத்தனர். மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் முதல்வர் பால் ஜெயகர் கொடியேற்றி சுதந்திர போரின் தியாகிகளை நினைவுகூர்ந்தார். என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மதுரை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். சர்வதேச லயன்ஸ் கிளப்ஸ் மாவட்ட கவர்னர் செல்வம் கொடியேற்றினார். மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளியில் கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம் கொடியேற்றினார். தாளாளர் பார்த்தசாரதி, உறுப்பினர் அமுதன், தலைமையாசிரியர் பாலாஜிராம், உதவி தலைமையாசிரியர்கள் வெங்கடசுப்பிரமணியன், மகேஸ்வரன் பங்கேற்றனர்.

யாதவர் கல்லுாரியில் தலைவர் ஜெயராமன் தலைமையில் கே.பி.எஸ்.கண்ணன் கொடியேற்றினார். செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், முதல்வர் ராஜூ, இணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் கிருஷ்ணவேல் செயற்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், கோபால், சுப்பையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மதுரை சம்மட்டிபுரம் பிள்ளைமார் சங்கம் மேல்நிலை பள்ளியில் நிர்வாகக்குழு துணைத் தலைவர் சண்முகவேல் கொடியேற்றினார். செயலாளர் முருகன், பொருளாளர் கல்யாணசுந்தரம், தலைமையாசிரியை ரம்யாலட்சுமி பங்கேற்றனர். பெருங்குடி அமுதம் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் ஜெயவீரபாண்டியன் கொடியேற்றினார். செஞ்சிலுவைச் சங்கம், குருளையர் இயக்கம், சாரண-சாரணியர் இயக்க அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். முதல்வர் ஜெயஷீலா, துணை முதல்வர் ஸ்டெல்லா ஜெயமணி பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

அரசு அலுவலகம் மாநகராட்சியில் மேயர் இந்திராணி கொடியேற்றினார். கமிஷனர் சித்ரா, துணை மேயர் நாகராஜன் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் டீன் அருள் சுந்தரேஷ்குமார் தேசியக் கொடியேற்றினார். என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மருத்துவக் கல்லுாரி, நர்சிங் பள்ளி, கல்லுாரி, பார்மசி கல்லுாரிகளின் முதல்வர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லுாரி மற்றும் அரசு மருத்துவமனையில் 25 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட டாக்டர், நர்ஸ், அலுவலர்கள், பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் 87 பேருக்கு டீன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை தலைமை அலுவலகத்தில் மேலாண் இயக்குநர் சரவணன் தேசிய கொடியேற்றினார். சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கிளை மேலாளர்கள், உதவி பொறியாளர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 34 பேருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பொது மேலாளர்கள் (தொழில்நுட்பம்- கூட்டாண்மை ) கோபாலகிருஷ்ணன், மணி, தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் மதுரை நகர் ஸ்டேஷனில் தென் மண்டல துணை இயக்குனர் ராஜேஷ்குமார் கொடியேற்றினார். உதவி மாவட்ட அலுவலர்கள் பாண்டியன், செழியன், சுரேஷ் கண்ணன் முன்னிலை வகித்தனர். தல்லாகுளத்தில் மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் கொடியேற்றினார். உதவி அலுவலர் திருமுருகன், நிலைய அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தல்லாகுளம் அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில் மண்டல இணை இயக்குநர் ராம்குமார் கொடியேற்றினார். முதன்மை டாக்டர் ஜோசப் அய்யாத்துரை, திருமங்கலம் உதவி இயக்குநர் சரவணன், நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் உமா மகேஸ்வரி, கால்நடை டாக்டர்கள் சங்கர விநாயகம், அறிவழகன், ஆமீனா கலந்து கொண்டனர். சிறப்பாக செயல்பட்ட டாக்டர் முத்துராம், ஆய்வாளர் கோமதிநாயகத்திற்கு கலெக்டர் பிரவீன்குமார் சான்றிதழ், கேடயம் வழங்கினார்.

காந்தி மியூசிய விழாவில் கல்வி அலுவலர் நடராஜன் வரவேற்றார். செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். பொருளாளர் செந்தில்குமார் கொடியேற்றினார். மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, சர்வசமய பிரார்த்தனை நடந்தது. காந்திய சிந்தனை சான்றிதழ், பட்டய தேர்வுகளில் வெற்றி பெற்ற அனுகிரகா கல்லுாரிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு காந்தி நினைவு நிதி செயலாளர் ராஜேந்திரன், காந்திய சிந்தனை கல்லுாரி முதல்வர் சேதுராக்காயி, அரசு வழக்கறிஞர் சொக்கலிங்கம், பேராசிரியர் சிவக்குமார், ரோட்டரி மல்லிகை, ரோட்டரி ஜல்லிக்கட்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அமைப்புகள் மதுரையில் தமிழ்நாடு பிராமண சமாஜம் மாவட்டம் மற்றும் கிளைகள் சார்பில் தலைவர் ரவி தலைமையில் கொடியேற்றப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர், கிளைத் தலைவர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் வேல்சங்கர் கொடியேற்றினார். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் தலைவர் ஜெகதீசன் கொடியேற்றினார். செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். மதுரை அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தில் சங்கத்தலைவர் ரத்தினவேலு கொடியேற்றினார். தலைமை செயல் அதிகாரி ராஜசகஸ்ரநாமி பங்கேற்றனர்.

தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர்வத்தல் சங்க வளாகத்தில் தலைவர் திருமுருகன் கொடியேற்றினார். செயலாளர் விஜிஸ், பொருளாளர் விஜயன், துணைத் தலைவர்கள் செல்வம், பால்கனி, இணைச் செயலாளர் மாரிமுத்து கலந்து கொண்டனர். மதுரை சங்கீத் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் செயலாளர் உலகநாதன் கொடியேற்றினார். தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாகி சேதுராமன் வரவேற்றார். பொறுப்பாளர்கள் அண்ணாத்துரை, வாசுதேவன், ஜெகதீசன், முத்துகிருஷ்ணன், ராஜ்மோகன், பகத்சிங், கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். மதுரை சாக்கு வியாபாரிகள் சங்கத்தில் தலைவர் சிவபாலன் தலைமையில் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். டாக்டர் சம்பத் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் அருண்குமார், உறுப்பினர்களின் குடும்ப நல நிதி வழங்கினர். கவுன்சிலர் சையது அபுதாஹீர் இனிப்பு வழங்கினார். ஜெயா ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். செயலாளர் கதிரேசன் நன்றி கூறினார்.

தமிழக சவுராஷ்டிரா முன்னேற்ற பேரவை விழாவில் துணைத்தலைவர் சர்மிளா வரவேற்றார். தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார். நிலையூர் பிட் 1 ஊராட்சி முன்னாள் தலைவர் பானுமதி கொடியேற்றினார். கைத்தறிநகர் ஐக்கிய சங்கத் தலைவர் பாஸ்கர், துணைத்தலைவர் ஹரிகிருஷ்ணன், செயலாளர் சிவகுமார், துணைச் செயலாளர் ராஜன், கமிட்டி உறுப்பினர் சகிலா கலந்து கொண்டனர். துணைச்செயலாளர் ஓம்குமார் நன்றி கூறினார். விக்டோரியா எட்வர்ட் மன்றத்தில் தனி அலுவலர் விஜயசாந்தி முன்னிலை கொடியேற்றப்பட்டது. மேலாளர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர். மதுரை மடீட்சியா அரங்கில் முன்னாள் தலைவர் அரவிந்த் கொடியேற்றினார். துணைத் தலைவர் சந்திரசேகரன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜ கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடந்தது. மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் கொடி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

திருப்பரங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளர் கருப்பசாமி தலைமையில் மூத்த உதவியாளர் முரளிதரன் கொடி ஏற்றினார். பணியாளர்கள், ஆனந்த்பாபு, பிரியதர்ஷினி கலந்து கொண்டனர்.

ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் சிவசுந்தரம் தலைமையில் ரயில்வே பள்ளி ஆசிரியர் ஸ்ரீதரன் கொடியேற்றினார். நிலைய மேலாளர்கள் வெங்கடேசன், ரங்கராஜன், பணியாளர்கள் ஷகில் புவனேஸ்வரி வெங்கடேசன், முன்னாள் ராணுவ வீரர் முகமது ரியாஸ் கலந்து கொண்டனர்.

ஹார்விப்பட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ரவிச்சந்திரன் கொடி ஏற்றினார். நிர்வாகிகள் அண்ணாமலை, வேட்டையார், குலசேகரன், கிருஷ்ணசாமி, குப்புசாமி, அரவிந்தன், சங்கரய்யா, பாஸ்கர்பாண்டி, ஆண்டவர், துளசிதாஸ், கந்தராஜ், ராமகிருஷ்ணன், மதுசூதனன் பங்கேற்றனர்.

மேலுார் சார்பு நீதிமன்றத்தில் சாமுண்டீஸ்வரி பிரபா, மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாராஜன், குற்றவியல் நீதித்துறை நடுவர் தென்றல் முத்து உள்ளிட்டோர் கொடியேற்றினர். வழக்கறிஞர் சங்க செயலாளர் சுரேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை கொடி ஏற்றிய நிகழ்ச்சியில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.

கொட்டாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, மேலுாரில் எஸ்.ஐ., ஆனந்த ஜோதி, கீழவளவில் எஸ்.ஐ.,அசோக்குமார், மேலுார் நகராட்சியில் தலைவர் முகமது யாசின் கொடியேற்றினர்.

அ.வலையப்பட்டி பள்ளியில் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், மில்டன் பள்ளியில் தாளாளர்கள் ரவிச்சந்திரன், ஜான் வின்சென்ட், ஆர்.வி., பள்ளியில் விஜயலட்சுமி, ஜாஸ் பள்ளியில் ஜெயந்த் வேத ஷ்யாம், லதாமாதவன் பொறியியல் கல்லுாரியில் முதல்வர் சரவணன் கொடியேற்றினர். வருவாய்த் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக தாசில்தார் செந்தாமரை, வட்ட சார்பு ஆய்வாளர் முத்துச்செல்வி, ஆர்.ஐ., இக்பால், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பழனியப்பன் உள்ளிட்டோருக்கும், போலீஸ் துறையில் டி.எஸ்.பி.,சிவக்குமார், எஸ்.ஐ., க்கள் தினேஷ், ராமச்சந்திரன், போலீசார் குமரேசன், பிரகாஷ் உள்ளிட்டோருக்கும் கலெக்டர் பிரவீன்குமார் விருது வழங்கி பாராட்டினார்.

உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகம், கிளைச் சிறைச்சாலையில் உதவி கலெக்டர் உட்கர்ஷ் குமார் கொடி ஏற்றினார். கிராமியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கிளைச் சிறைக் கண்காணிப்பாளர் மீர்ஷ்உசேன், ஏட்டுகள் கணேசன், சத்தியமூர்த்தி பங்கேற்றனர். கைதிகளுக்கு இனிப்பு வழங்கினார்.

தொட்டப்பநாயக்கனுார், குன்னுாத்துப்பட்டியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் உதவி கலெக்டர் பங்கேற்றார். தாசில்தார் பாலகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். நீதிமன்றத்தில் நீதிபதி சத்யநாராயணன் கொடி ஏற்றினார். அரசு வழக்கறிஞர் ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாலகிருஷ்ணன், டி.எஸ்.பி., அலுவலகத்தில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா கொடி ஏற்றினர். நகராட்சி அலுவலகத்தில் துணைச் சேர்மன் தேன்மொழி கொடி ஏற்றினார். கமிஷனர் இளவரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வட்டாரக் கல்வி அலுவலகத்தில் அலுவலர் வடிவேல் கொடி ஏற்றினார். வட்டாரவளமைய மேற்பார்வையாளர் ரமேஷ்ராஜ், அலுவலர்கள் பங்கேற்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரியில் முதல்வர் பால்ராஜ் தலைமையில் காந்திய சிந்தனை கல்லுாரி முதல்வர் தேவதாஸ் கொடி ஏற்றினார். என்.சி.சி., இயற்கை வள பாதுகாப்பு குழு மாணவ மாணவிகள் அணிவகுப்பு நடத்தினர். தமிழ்த்துறைத் தலைவர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

- சோழவந்தான் பேரூராட்சியில் சேர்மன் ஜெயராமன் கொடி ஏற்றினார். செயல் அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். வார்டு கவுன்சிலர்கள், துாய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில்களில் சிறப்பு கூட்டு வழிபாடு, பொது விருந்து நடந்தது. அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி கலந்து கொண்டார். நிர்வாக அலுவலர்கள் கார்த்திகை செல்வி, இளமதி,கோயில் பணியாளர்கள் ஏற்பாடுகளைச் செய்தனர்.

விக்கிரமங்கலம் அருகே செக்கான் கோவில்பட்டியில் நடந்த கூட்டத்திற்கு பற்றாளர் சங்கர் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் தனபாண்டியன் தீர்மானம் வாசித்தார். வேளாண் அலுவலர் மணிகண்டன், கள்ளர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை லூர்து மெர்சிகீதா கலந்து கொண்டனர்.சக்கரப்ப நாயக்கனுார் அருகே மணல பட்டியில் பற்றாளர் சந்திரா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பாண்டி தீர்மானம் வாசித்தார்.

பேரையூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்லப்பாண்டி, டி.எஸ்.பி அலுவலகத்தில் ஏ.எஸ்.பி., அஸ்வினி, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பூமா கொடியேற்றினர். எஸ்.ஐ., சின்னசாமி, போலீசார் கலந்து கொண்டனர். எஸ்.கோட்டைபட்டி பராசக்தி மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ஜெகதீசன், அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் மகேஷ் குமார் கொடியேற்றினர். வி ராமசாமிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அய்யனார், எஸ்.கீழப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சுமதி கொடியேற்றினர்.

டி. கல்லுப்பட்டி லார்டு வெங்கடேஸ்வரா பள்ளியில் தலைமை ஆசிரியர் சந்திரா, பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் முத்துகணேசன் கொடியேற்றினர். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் குருநாதன் கொடியேற்றினார். எஸ்.ஐ., கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அலங்காநல்லுார் தேவசேரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் கலெக்டர் பிரவீன் குமார் முன்னிலையில் நடந்தது. எம்.எல்.ஏ.,வெங்கடேசன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, செயற்பொறியாளர் இந்துமதி, ஊராட்சிகள் துறை உதவி இயக்குனர் அரவிந்த், பி.டி.ஓ.,க்கள் வள்ளி, கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் அழகுமீனா தீர்மானங்களை வாசித்தார்.

இப்பகுதி மக்களின் அடிப்படை தேவையான கூடுதல் தெருவிளக்கு, கிராமத்திற்கு தனி பஸ், நடுநிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம், மகளிர் குழு கட்டடம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். சுகாதாரம், வேளாண், தோட்டக்கலை உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

வாடிப்பட்டி பேரூராட்சியில் தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்தார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., கொடி ஏற்றினார். துணை தலைவர் கார்த்திக், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, செயல் அலுவலர் ஜெயலட்சுமி, பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். சோழவந்தான் சட்டசபை தொகுதி அலுவலகத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., கொடியேற்றினார். நகர செயலாளர்கள் பால்பாண்டியன்,சத்திய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஒன்றிய செயலாளர்கள் பாலா ராஜேந்திரன், பசும்பொன்மாறன், தன்ராஜ், முன்னாள் நகர செயலாளர் பிரகாஷ் உட்பட தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி செல்லையா தலைமை வகித்தார். நீதிபதி ராம் கிஷோர் கொடியேற்றினார். வழக்கறிஞர்கள் செல்வகுமார், ஹரிச்சந்திரன், முத்துமணி, சிவராமன்,அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி, மற்றும் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்றனர்.

எழுமலை பேரூராட்சியில் தலைவர் ஜெயராமன் கொடி ஏற்றினார். செயல் அலுவலர் ஜெயமுருகன், துணைத்தலைவர் நாகஜோதி, கவுன்சிலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

பாரதியார் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் பொன்கருணாநிதி கொடி ஏற்றினார். முதல்வர் ஆறுமுகசுந்தரி, நிர்வாகிகள் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தர்மவித்யாபவன் நர்சரி, பிரைமரி பள்ளியில் முதல்வர் மேகலா முன்னிலையில் நிர்வாகி உதயசந்திரன் கொடி ஏற்றினார். எழுமலை அரிஜன் துவக்கப்பள்ளியில் நிர்வாகி வரதராஜன் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் வளர்மதி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

சின்னக்கட்டளை பாரதியார் நர்சரி பிரைமரி நிர்வாகி பள்ளியில் முதல்வர் ஆனந்தராஜா முன்னிலையில் நிர்வாகி பொன்திருமலைராஜன் கொடி ஏற்றினார்.

திருவள்ளுவர் கல்வியியல் கல்லுாரியில் முதல்வர் கருப்பசாமி தலைமையில் நிர்வாகி லோகநாதன் கொடி ஏற்றினார். திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லுாரியில் நிர்வாக அலுவலர் சந்திரன் தலைமையில் நிர்வாகி ராமகிருஷ்ணன், பாலிடெக்னிக் கல்லுாரியில் நிர்வாகி சுப்பிரமணி தலைமையில் நிர்வாகி செல்வராஜ், மெட்ரிக் பள்ளியில் நிர்வாகி சென்னகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகி பெருமாள் கொடி ஏற்றினர்.

விச்வ வித்யாலயா பள்ளியில் முதல்வர் யுவராஜ், நிர்வாகிகள் முன்னிலையில் தாளாளர் பாண்டியன் கொடி ஏற்றினார். ஆசிரியை மீனா நன்றி கூறினார்.

விவேகானந்தா நடுநிலைப்பள்ளியில் செயலாளர் சிவானந்தா முன்னிலையில் சிவகுருசேகர் கொடியேற்றினார். தலைவர் பெருமாள், சுந்தர்ராஜன், தலைமை ஆசிரியர் பாண்டிச்செல்வி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us