/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இனி 'ப்ரீ'யா... போகலாம்
/
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இனி 'ப்ரீ'யா... போகலாம்
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இனி 'ப்ரீ'யா... போகலாம்
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இனி 'ப்ரீ'யா... போகலாம்
ADDED : அக் 08, 2024 04:42 AM
மதுரை : மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பறைகளை மக்கள் இனி இலவசமாக பயன்படுத்தலாம். இவற்றின் பராமரிப்பை மாநகராட்சியே மேற்கொள்ளும்.
இப்பஸ் ஸ்டாண்டில் 18 கட்டண கழிப்பறைகள் உள்ளன. ஒப்பந்ததாரர்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பது உள்ளிட்ட புகார்கள் தொடர்ந்து எழுந்தன. சில நாட்களுக்கு முன் அமைச்சர் உதயநிதி மதுரை வருகையின் போது மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் கழிப்பறைகளை ஆய்வு செய்து பராமரிப்பு பணிக்கு முக்கியத்துவம் அளிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தபோதும் கழிப்பறைகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஒரு கழிப்பறையின் அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது மாநகராட்சியால் ஒப்பந்தம் பெற்றவர் அந்த கழிப்பறையை பராமரிக்கவில்லை எனவும், மூன்றாவது நபர் கொள்ளை வசூல் செய்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் பஸ் ஸ்டாண்டிற்குள் உள்ள அனைத்தும் இலவச கழிப்பறைகளாக செயல்படும் என நேற்று (அக். 7) மாநகராட்சி அறிவித்துள்ளது.