/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எதிர்க்கும் வேட்பாளர்களை டிபாசிட் இழக்க செய்வோம்: செல்லூர் ராஜூ சவால்
/
எதிர்க்கும் வேட்பாளர்களை டிபாசிட் இழக்க செய்வோம்: செல்லூர் ராஜூ சவால்
எதிர்க்கும் வேட்பாளர்களை டிபாசிட் இழக்க செய்வோம்: செல்லூர் ராஜூ சவால்
எதிர்க்கும் வேட்பாளர்களை டிபாசிட் இழக்க செய்வோம்: செல்லூர் ராஜூ சவால்
ADDED : மார் 18, 2024 07:06 AM
மதுரை : ''அ.தி.மு.க., வை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களை டிபாசிட்டை இழக்க செய்வோம்''' என மதுரையில் நடந்த ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜ் பேசினார்.
மதுரை நகர் அ.தி.மு.க., லோக்சபா தேர்தல் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தெப்பக்குளத்தில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:
நாம் கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து எறும்பு, தேனீ போல் ஓட்டுகளைச் சேகரிக்க வேண்டும். இங்கு நம்தொண்டர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. நம்மை பார்த்து கூட்டணிக்கு கட்சிகள் வரவில்லை என்கிறார்கள்.
கூட்டணி கட்சிகளுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எத்தகைய அந்தஸ்து வழங்கினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் இந்தியாவின் இரும்பு பெண்மணி. பல கட்சிகளும் நம்மோடு கூட்டணி வைத்துக்கொள்ள ஆசைப்படுகின்றன.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு பல்வேறு போதைப் பொருட்களை கடத்தும் தலைமையிடமாக தமிழகம் உள்ளது. விலைவாசி உயர்வு, வீட்டு வரி, மின் கட்டணம் உயர்வு இவைதான் தி.மு.க.,வின் 3 ஆண்டுகால சாதனை. இந்த லோக்சபா தேர்தலில் மக்கள் ஓட்டுப்புரட்சியால் அவர்களை ஓட விடுவர். அதற்கு இந்தத் தேர்தல் பொன்னான வாய்ப்பு.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு, தொழில் பாதிப்பு போன்றவற்றால் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட வருகிற லோக்சபா தேர்தலில் நம்மை எதிர்த்து நிற்போரை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும். அ.தி.மு.க., தொண்டனை யாராலும் வெல்ல முடியாது என்றார்.
முன்னதாக ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., பேசுகையில், ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒரே கூட்டணி மக்கள் கூட்டணி. பா.மா.க.,வுக்கு மாம்பழம் சின்னம் வாங்கி கொடுத்த கட்சி அ.தி.மு.க., ஆனால் ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னத்தை வாங்கி கொடுத்ததும் அ.தி.மு.க., தே.மு.தி.க., வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வாங்கிக் கொடுத்தவர் ஜெயலலிதா. இந்தத் தேர்தலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது செல்லுபடியாகாது. தவறு செய்வோரை மக்கள் வீழ்த்துவார்கள் என்றார்.
பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் அண்ணாத்துரை, துணைச் செயலாளர் ராஜா, பொருளாளர் குமார், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், கிழக்கு மாவட்ட இளைஞர்அணி செயலாளர் ரமேஷ் பங்கேற்றனர்.

